“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்”… தமிழகத்தின் 234 தொகுதிகளிலும்…. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான்… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தற்போது முற்றுப்புள்ளிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸின் வருகைக்காக தவெக தலைமை காத்திருந்த நிலையில், அக்கட்சி முடிவெடுப்பதில் காட்டி வரும் தாமதம் மற்றும் தயக்கத்தால் அதிருப்தியடைந்த நடிகர் விஜய், வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இன்றி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை உறுதி செய்யாமல் இழுபறி நிலையில் நீடிப்பதால், இனி அக்கட்சி முன்வந்தாலும் கூட்டணி தேவையில்லை என்ற மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்தால், காங்கிரஸ் கட்சி மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், திமுகவிடம் குறைந்த இடங்களைப் பெற்றுக்கொண்டு இரண்டாம் நிலையில் நீடிப்பதை அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

தனி வழியில் களம் காணும் விஜய்யின் இந்தத் துணிச்சலான முடிவு, தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், பிற கட்சிகளைச் சார்ந்து நிற்காமல் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்டுள்ளார். இந்த ‘தனி வழி’ வியூகம் மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் தேர்தலில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Nanthini

Recent Posts

“அப்பா திட்டிட்டாரு…” சிகரெட்டில் கஞ்சா… காலி ரயில் பெட்டியில் கொடூரம்…. 16 வயது சிறுமியை மாற்றி மாற்றி சீரழித்த காம கொடூரர்கள்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…

5 minutes ago

எல்.ஏ உத்தரவாம்?… கைக்குழந்தைன்னு கூட பாக்காம அடிச்சுட்டாங்களே… 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… லக்கிம்பூர் கேரியில் நடந்த அராஜகம்… பின்னணி என்ன?…

லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…

26 minutes ago

அதிமுகவுக்கு எகிறும் ஆதரவு அலை… EPS-யை சந்தித்து ஆதரவுக் கடிதம்… கொடுத்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி…!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…

28 minutes ago

ஷாக்… அமைச்சரை கழற்றிவிட்ட தவெக… மதுராந்தகம் தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…

35 minutes ago

NDA-வில் இருந்து பாமக விலகலா?… அன்புமணி முடிவால் அதிர்ச்சியில் அதிமுக…!!

அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…

40 minutes ago

CM விஜய்க்கு பறந்த அவசர அப்டேட்… ICU-வில் VS பாபு… நேரில் செல்கிறாரா முதல்வர்?…

ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

47 minutes ago