தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வந்த விஜய் அவர்கள். ஒரு கட்டத்தில் மாஸ் நடிகராக உருவெடுத்தார். அதனை தொடர்ந்து தென்னிந்தியா சினிமாவில் யாராலும் அசைக்கமுடியாத ஒரு நடிகராக உருவானார் விஜய் அவர்கள். இவர் படங்கள் ரிலீஸ் என்றால் தமிழ் நாட்டை தியேட்டரை தாண்டி பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கின.
இந்நிலையில் தற்போது GOAT படத்தில் நடித்து வரும் விஜய் அவர்கள் அரசியலிலும் இறங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது ரசிகர்களை பார்த்து ஹாய் சொல்லும் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. விரைவில் GOAT திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இது ஒரு பக்கம் இருப்பினும் தனது அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினம் தனது TVK கட்சியின் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்தார் தளபதி விஜய் அவர்கள். அதில் உறுப்பினராக சேர மக்களும் அவருடைய ரசிகர்களும் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் பாடகர் க்ரிஷ் அவர்கள்(நடிகை சங்கீதாவின் கணவர்) தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் தனது கைபேசியில் தளபதி விஜய் அவர்கள் ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார். பிரியமுடன் விஜய் என்று தளபதி விஜய் அவர்கள் ஆட்டோகிராப் போட்டுள்ளதை வெளியிட்டு “Love you anna” என்று கூறி இதனை போஸ்ட் செய்துள்ளார் பாடகரை க்ரிஷ் அவர்கள். பாடகர் க்ரிஷ் அவர்கள் விஜய்க்கு ஒரு சின்ன தாமரை, என் friend-அ போல யாரு மச்சான் உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Got My Phone Autographed…
Love u Anna….????????????#GOAT pic.twitter.com/vnRlVLgcQD— Krishh (@krishoffl) March 9, 2024