தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். தற்பொழுது இவர் அரசியலிலும் களமிறங்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்காக அவர் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கி அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்ட உதவிகளை அவ்வப்பொழுது வழங்கி வருகிறார். சென்னை வெள்ளத்திலும் சரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளங்களிலும் சரி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்தனர்.
அந்த வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேற்று செய்தார். .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே டி சி நகரை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய பையை நடிகர் விஜய் வழங்கினார்.
மேலும் அங்கு வந்திருந்த யாரையும் எழுந்திரித்து நிற்க வேண்டாம் எனக் கூறியும், மேடைக்கு வரவழைத்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காமல் அவர்கள் அருகிலேயே சென்று நலம் விசாரித்து உதவி தொகை கொடுத்தார். மேலும் நடிகர் விஜய் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ .10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், இது மட்டுமின்றி வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக கொடுத்தார். இதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் வயிறார உணவும் கொடுத்திருந்தார்.
இதுமட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியத்துக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸை ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய். அந்த ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் சைலண்டாக செய்த இந்த செயல் குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.