Connect with us

CINEMA

“பிரபல ஹாலிவுட் நடிகரின் படத்தையே பின்னுக்கு தள்ளிய லியோ”…. உலக புகழில் தளபதி விஜய்…. வெளியான அறிக்கை…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கட்டாயம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் வெற்றியை கொடுக்கும். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

   

இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன்களை அள்ளிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார் . அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றது.

இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ லிகாபரியோ நடித்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கில்லஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளது நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம்.

வெரைட்டியின் புதிய அறிக்கை படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ தற்போது உலக அளவில் 48.5 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன், லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன் மற்றும் ராபர்ட் திரைப்படம் 44 மில்லியன் வசூலுக்கும் பின்னால் நிற்கின்றது. இதனால் உலக அளவில் லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக நடிகர் விஜய் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top