தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் டி ராஜேந்தர். சினிமாவில் வெற்றி காண்பது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் தன்னை நிரூபித்தவர். இவர் நடிகர் சிம்புவின் தந்தையும் கூட. டி ராஜேந்திரன் இவரின் எதுகை மோனைப் பேச்சு பலரையும் ரசிக்க வைத்தது.

ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்தர் எந்த ஒரு திரை பின்புறமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர். வெறும் இயக்கம் மட்டும் இன்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என அனைத்து ஜானரிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டில் நிரூபித்தவர்.
இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு படத்துக்கு கூட அவரிடம் செல்லாமல் தானே இசையமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் டி ராஜேந்தர். தன்னை போலவே தனது மகனையும் உருவாக்க நினைத்தார். அதனாலே சிறு வயது முதலே அவரை நடிக்க கொண்டு வந்து தற்போது தமிழில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் பெறுகிறார் சிம்பு.

சினிமாவின் காலகட்டம் மாறும்போது அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டார் டி ராஜேந்தர். தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர், வறுமையின் கோரப்பிடியில் இருந்து வளர்ந்து வந்தவர். முதல் படத்தை இயக்கிய டிஆர்-க்கு மிகப்பெரிய அதிர்ச்சி இருந்தது.
படம் நல்ல ஹிட் அடித்தாலும் அப்படத்தில் ராஜேந்திரரின் பெயர் இடம் பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்கி வந்தார் டி ராஜேந்திரன். அவர்களின் அடையாளமே தாடி தான். பெரும்பாலும் டி ராஜேந்திரன் அவர்களின் பல திரைப்படங்களை நம்மால் டிவியில் பார்க்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் கேட்டுக் கொண்டதால் மட்டுமே ஜெயா டிவியில் இரண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகும். அதைத்தவிர மற்ற படங்கள் அனைத்தும் ராயல்டி வாங்கி வைத்திருக்கின்றார். தற்போது இசையமைப்பாளர் இளையராஜா அதற்காகத்தான் போராடி வருகின்றார். ஆனால் அப்போதே தனது படத்திற்கு ராயல்டி வாங்கி யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்து வருகிறார் டி ராஜேந்திரன்.
