ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே கடைசிப் படம் என்று கூறப்படுவதால், இப்படத்தைக் காண ஒட்டுமொத்தத் திரையுலகமே காத்திருக்கிறது. இருப்பினும், தணிக்கை வாரிய சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தற்போது வரை வெளியாகாமல் இழுபறியில் நீடித்து வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், படத்தின் சில முக்கியக் காட்சிகள் இணையத்தில் கசிந்து (Leak) வைரலாகி வருவது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே காட்சிகள் கசிந்துள்ளதால், படத்தின் வசூல் மற்றும் சுவாரஸ்யம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இந்தக் காட்சிகளைப் பகிர்ந்து வருவதால், இதனைத் தடுக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியான செய்தி வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது, அனைவரும் சட்டபூர்வமான தளங்கள் மற்றும் திரையரங்குகள் வாயிலாக மட்டுமே பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் அவர் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…
விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…