Categories: சினிமா

செருப்பு போடாமல் இருக்கும்போது அது கிடைக்கிறது.. மனம் திறந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி..!!

Spread the love

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முன்னதாக விஜய் ஆண்டனி இசையில் உருவான நாக்கு முக்க, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. முதல் படமே வித்தியாசமான கதை களத்தோடு அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் விஜய் ஆண்டனி நடித்தார்.

நடிகராக இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவானார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரிழந்தார்.

ஏற்கனவே அமைதியான குணமுடைய விஜய் ஆண்டனி தனது மகள் இறப்பிற்கு பிறகு மேலும் அமைதியாகிவிட்டார். படத்தின் ப்ரோமோஷன் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் தான் வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வைத்து விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனியிடம் செருப்பு போடாமல் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி நான் சில நாட்களுக்கு முன்பு செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாத போது மனதுக்கு அமைதி கிடைத்தது.

ஆரோக்கியத்துக்கும் அது நல்லது தான். அது மட்டும் இல்லாமல் நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். எப்போது நான் செருப்பு போடாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்த வித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இதுதான் சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

7 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

18 minutes ago

“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…

25 minutes ago

கூட்டணி வைத்தது தப்பா போச்சா?… பொறுமை இழந்து முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…

37 minutes ago

“யாரும் எழுந்திருச்சி ஓடிடக் கூடாது”…. உதயநிதிக்கு முதல்வர் விஜய் வைத்த ஓபன் சேலஞ்ச்…. சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்….!

தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…

41 minutes ago

“யாரிடமாவது சொன்னா அவ்வளவுதான்”…. பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட்.. பபுள்கம் ஒட்டி… 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்….!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…

50 minutes ago