#image_title
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் திரைப்படத்தில் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துரை செந்தில்குமார் ஏற்கனவே எதிர்நீச்சல், கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். கருடன் திரைப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.
நடிகர் சூரியுடன் கருடன் திரைப்படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 31- ஆம் தேதி கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ரிலீசான இரண்டு நாட்களிலேயே படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூரி என்றாலே காமெடி கதாபாத்திரத்திற்கு பிரபலமானவர். தற்போது ஆக்சன் ஹீரோவாகவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே சூரி நடிப்பில் ரிலீஸ் ஆன விடுதலை திரைப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் உலக அளவில் கருடன் திரைப்படம் 2 நாட்களில் சுமார் 15.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. முதல் நாளில் கருடன் திரைப்படம் 4 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது நாள் முடிவில் 15.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…
2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அரசியல் நகர்வுகள், இந்திய அரசியலில்…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…