திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.634 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் காலையிலேயே ஆய்வுப் பணிகள் தொடங்கின. திருச்சியுடன் சேர்த்து, சென்னையிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் எனப் பல்வேறு இடங்களுக்கு இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் முதற்கட்ட ஆய்வு நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை தொடர்கிறது. இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற 7 மணி நேரத்…
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர்…
தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் தொகையைப் பெற்று மோசடி செய்து வந்த 'வில்லிவாக்கம்…
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில்…
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி…
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, தன்னைவிட்டுவிட்டு வேறு திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து, அவரது கணவனின்…