Categories: சினிமா

உடம்பு முழுவதும் சாயம்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வித்தியாசமாக வந்த விஜய் ஆண்டனி.. என்ன ஒரு டெடிகேஷன் பாருங்க..!

Spread the love

‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி சாயம் பூசிய முகத்துடன் வந்ததை பார்த்து பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வித்யாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், எடிட்டர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஜீவா சங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக வெளிவந்த நான் என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார்.

இந்த படத்தில் சித்தார்த், ரூபா மந்திரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். அதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன், கோடியில் ஒருவன், காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் .அதிலும் பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இதனால் பிச்சைக்காரன் 2 என்ற திரைப்படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார். பின்னர் கடைசியாக ரோமியோ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திரைப்படங்கள் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தை கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ டாலி, தனஞ்செயன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், ஏஎல் அழகப்பன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

சத்யராஜ் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெர்சன்ஸ் சார்பில் டி லலிதா பி பிரதீப் மற்றும் பங்கஜ் போகர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கவிதை தரத்துடன் ஆக்சன் என்டர்டைன் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். ஆனால் அவர் சற்று வித்தியாசமான வேடத்தில் வந்திருந்தார். உடம்பு முழுவதும் ஒரு பக்கம் சாயம் முகத்தில் கை, கால் என அனைத்து பக்கங்களிலும் கருப்பு நிற சாயத்தை பூசிக்கொண்டு வந்தார்.

பின்னர் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு தொகுப்பாளர் கூறினார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய காரணத்தினால் ஒரு படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்படியே வந்துவிட்டார். விஜய் ஆண்டனி மேக்கப்பை கலைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் தன்னால் எந்த தாமதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக மிக டெடிகேஷன் உடன் அப்படியே வந்திருக்கின்றார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

4 minutes ago

“இனி இது ‘ட்ரான்ப் ஜலசந்தி'”…. அமெரிக்க அதிபரின் ஒற்றைப் பதிவால் உலகப் போருக்குத் தயாராகும் மத்திய கிழக்கு… பரபரக்கும் சர்வதேச அரசியல்….!

ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…

19 minutes ago

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

31 minutes ago

“எங்களுக்கு வந்தா ரத்தம்… அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”…. இரட்டை வேடம் போடும் ஆளுங்கட்சி…. சட்டப்பேரவையில் வெடித்த உதயநிதி…..!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…

36 minutes ago

என்ன CM சார் இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?….. கர்நாடகாவின் ‘ஒரே நாள்’ மெகா மாஸ்டர்பிளான்…. ரூ.29,679 கோடி முதலீடு… அதிர்ச்சியில் தமிழகம்….!

தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…

41 minutes ago

“என்னால அவன் இல்லாம வாழ முடியாது”…. கல்லூரி 5வது மாடியில் இருந்து குதித்த 19 வயது மாணவி…. அலறிய தாய்… ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு….!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…

50 minutes ago