Categories: சினிமா

அசினுக்காகக் காத்திருந்த விஜய்யும் சூர்யாவும்… இந்த கதை தெரியுமா?.. அந்த அளவுக்கு பீக்கில் இருந்த மார்க்கெட்!

Spread the love

தன்னுடைய திரைவாழ்க்கையிலேயே அசின் நடித்தது மொத்தம் 25 படங்களுக்குள்தான் இருக்கும். ஆனால் அவர் கொடுத்த வெற்றிகள் மற்றும் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது அளப்பரியது. அசின் இருந்தவரை தமிழ் சினிமாவில் அவர்தான் முதன்மையான நடிகராக இருந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தைத் தவிர மற்ற முன்னணிக் கதாநாயகர்களோடும் அவர் படம் பண்ணிவிட்டார். 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய வருகையப் பதிவு செய்தார்.

அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் நடித்த உள்ளம் கேட்குமே, கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், வேல் மற்றும் காவலன் என அனைத்துப் படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள்தான். முருகதாஸ், கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அசினையே இந்தியிலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இதன் மூலம் அவரின் பாலிவுட் பிரவேசம் நடந்தது.

அந்த படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை இந்தி திரையுலகில் கொடுத்தது. அதனால் அங்கு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் அடுத்த ஸ்ரீதேவி என்றெல்லாம் அவர் புகழப்பட்டார். அதனால் அவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் அவரை நடிக்க வைக்க பலர் முயன்ற போதும் அவர் அதன் பின்னர் பெரிதாக தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை.

பாலிவுட் சென்ற பின்னர் அவர் தமிழில் நடித்தது இரண்டு படங்கள்தான். ஒன்று சூர்யா நடித்த வேல் மற்றொன்று விஜய் நடித்த காவலன். இந்த இரண்டு படங்களுமே அவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் போது  கிடைக்கும் இடைவெளிகளில் வந்து அவர் நடித்துக் கொடுத்த படங்கள்தான். இதற்காக இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் மற்றும் சூர்யா போன்றோரே அசினுக்காகக் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தளவுக்கு அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால் அவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகிவிட்டார் என்பதுதான் சோகம்.

vinoth

Recent Posts

ஆசை யாரை விட்டது… விதியை மீறி டிரம்ப் வாங்கிய ரூ. 33 லட்சம் வைர மோதிரம்… பின்னணியில் இருக்கும் செக்…!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…

4 minutes ago

பீகார் ரயிலில் பயங்கரம்… கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய வக்கிர புத்தி… கதறி அழுத பெண் – நெட்டிசன்களை கொதிக்க வைத்த காட்சி…!!

பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

9 minutes ago

“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

15 minutes ago

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

24 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

31 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

40 minutes ago