ஆசை யாரை விட்டது… விதியை மீறி டிரம்ப் வாங்கிய ரூ. 33 லட்சம் வைர மோதிரம்… பின்னணியில் இருக்கும் செக்…!

Spread the love

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அவர் விதித்த இறக்குமதி வரியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தலையிட்டுக் குறைத்தது. அதேபோல், ஈரான் மீது தொடுத்த போரினால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகமே தவித்த நிலையில், தற்போது ஒருவழியாக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி அந்தப் பிரச்சனை ஓய்ந்துள்ளது. ஆனால், இந்த அரசியல் அதிரடிகளுக்கு இடையே, டிரம்புக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு சொகுசு வைர மோதிரம் இப்போது அவருக்குப் புதிய தலைவலியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரபல வைர நிறுவனம் ஒன்று, கைக்கடிகாரத்தின் அளவிற்குப் பெரிய, அசுர அளவிலான தங்க மோதிரம் ஒன்றை அதிபர் டிரம்புக்குச் சமீபத்தில் பரிசாக வழங்கியுள்ளது. உலக வைர மையத்தின் தலைவரான இசிடோர் மோர்செல், பெல்ஜியத்திற்கான அமெரிக்க தூதரிடம் இந்த மோதிரத்தை ஒப்படைத்துள்ளார். தங்கம் மட்டுமன்றி, இதில் 300-க்கும் மேற்பட்ட உயர்தர வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 33 லட்சம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பார்க்கவே பிரமிப்பூட்டும் இந்த மோதிரம்தான் தற்போது டிரம்புக்குச் சட்ட ரீதியான சிக்கலாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ அல்லது தனிநபர்களிடமிருந்தோ இவ்வளவு பெரிய விலையுயர்ந்த பரிசுகளை நேரடியாக ஏற்றுக்கொள்வது வெள்ளை மாளிகையின் பாரம்பரிய மரபுகளுக்கும் விதிகளுக்கும் எதிரானது. இதனைச் சுட்டிக்காட்டி அங்குள்ள எதிர்க்கட்சியினர், டிரம்ப் விதியை மீறிவிட்டார் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், “கைக்கு எட்டிய மோதிரம் விரலுக்கு எட்டாமல்” டிரம்ப் அதைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார், இது நம்ம ஊர் பாணியில் சொல்லப்போனால் ‘வடை போச்சே’ என்ற கதையாக மாறியுள்ளது.

SATHISH R

Recent Posts

“17 வயது சிறுவனுக்கு காரை ஏன் கொடுத்தீங்க…?” நீதிபதி மீதே பாய்ந்த வழக்கு… வியாபாரி பலியான வழக்கு… வைரலாகும் ஷாக் நியூஸ்…!!

கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார், ஸ்கூட்டர் மீது பலமாக…

3 minutes ago

அம்மாடியோ… தண்ணீரில் பைக் ரேஸ்… 17 வருட வெறி… உயிரைப் பணயம் வைத்து கின்னஸ் சாதனை… இணையத்தில் ஷாக்கில் நெட்டிசென்கள்…!

சீனாவைச் சேர்ந்த ZX Moto வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஷாங் ஷு, தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி புதிய…

3 minutes ago

“அய்யோ போச்சு!”… நடுரோட்டில் 360 டிகிரி சுழன்ற கார்… கட்டுப்பாட்டை இழந்த கார்… அடுத்த நொடி நடந்த திடுக்கிடும் அதிசயம்…!!

சாலைகளில் நாம் காட்டும் அவசரமும் அதீத வேகமும் விபத்துகளுக்கு முதன்மையான அழைப்பாக அமைகின்றன. சந்திப்புகளையோ அல்லது பிற வாகனங்கள் இணையும்…

14 minutes ago

அதிர்ச்சி… 2027-ல் காத்திருக்கும் பேரழிவு?… மனிதர்களுக்கு சூப்பர் பவர்… பாபா வங்காவின் பீதியூட்டும் 4 ரகசியங்கள்…!

1911-ஆம் ஆண்டு பிறந்த பாபா வங்கா, சிறுவயதில் பார்வையை இழந்த பிறகு எதிர்காலத்தைக் கணிக்கும் விசேஷ ஆற்றலைப் பெற்றதாக நம்பப்படுகிறது.…

22 minutes ago

“நிறுத்தாம போயிருக்கணும்!”… சிக்னல் போட்டதால தாக்கப்பட்ட ஓட்டுநர்… ரெட் சிக்னலை மதிக்காத கார்… கொந்தளிக்கும் இணையம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சிக்னல் விதியை முறையாகப் பின்பற்றிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம்…

29 minutes ago

ஸ்டாலின் சார்… உங்க பேரப் பிள்ளைகளை எப்போதாவது அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கீங்களா?… திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஆதவ்… அரசியலில் பரபரப்பு…!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், யாரையும் பழிவாங்கும் நோக்கம் தங்களுக்குக் கிடையாது என்றும், 1977-க்குப் பிறகு மக்கள்…

36 minutes ago