BREAKING: சுங்கச்சாவடியில் திடீரென சரணடைந்த 7 பேர்… சேலம் ரவுடி ஜங்ஷன் டேவிட்டின் கதையை முடித்த மினிட்-டு-மினிட் ஷாக்…. அதிரடி திருப்பம்….!

Spread the love

சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளான 7 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஜங்ஷன் டேவிட் (எ) உதயகுமார் (41) என்பவர் மீது கொலை, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நில மோசடி வழக்கு ஒன்றில் கைதாகிச் சிறையிலிருந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

நேற்று காலை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, இரும்பாலை சாலை புது ரோடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட மர்மக் கும்பல், ஜங்ஷன் டேவிட்டை வழிமறித்து அரிவாளால் வெட்டத் தொடங்கியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை விட்டு இறங்கி, மேம்பாலச் சுவரில் ஏறி கீழே குதித்த டேவிட், நிலைதடுமாறி அருகிலிருந்த கற்கள் மீது விழுந்தார்.

அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்த அந்தக் கும்பல், தங்கள் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் டேவிட்டை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த ஜங்ஷன் டேவிட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர், டேவிட்டின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிச்சலான கொலைச் சம்பவம் சேலம் மாநகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இக்கொலை குறித்து சேலம் மாநகரக் காவல் ஆணையர் பாபு உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய ராஜன், கார்த்திக், சுலைமான், மோகன், ரகு, அருண்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 7 பேர் சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் உயர் காவல் அதிகாரிகள் கொலைக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“நிறுத்தாம போயிருக்கணும்!”… சிக்னல் போட்டதால தாக்கப்பட்ட ஓட்டுநர்… ரெட் சிக்னலை மதிக்காத கார்… கொந்தளிக்கும் இணையம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சிக்னல் விதியை முறையாகப் பின்பற்றிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம்…

4 minutes ago

ஸ்டாலின் சார்… உங்க பேரப் பிள்ளைகளை எப்போதாவது அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கீங்களா?… திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஆதவ்… அரசியலில் பரபரப்பு…!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், யாரையும் பழிவாங்கும் நோக்கம் தங்களுக்குக் கிடையாது என்றும், 1977-க்குப் பிறகு மக்கள்…

10 minutes ago

தெருவிளக்கு எரியுதுடா?… நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… பிறந்து சில நாட்களான கைக்குழந்தையின் தந்தை படுகொலை… குலை நடுங்கவைக்கும் திக் திக் சம்பவம்…!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளம் செல்வன் புதூர் பகுதியைச் சேர்ந்த கவின் (27) என்பவர், அழகப்பபுரம் பேரூராட்சியில்…

27 minutes ago

அங்கே என்ன பண்றீங்க?… சுற்றுலா தலத்தில் மனைவியை கள்ளக்காதலனுடன் பிடித்த கணவன்… கயிற்றால் கட்டி பெல்ட்டால் விளாசிய சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள படாயாகுண்ட் சுற்றுலாத் தலத்தில், தனது மனைவியை வேறு ஒருவருடன் ஒன்றாகப் பார்த்த கணவர்…

33 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… முதலை கறி செம்ம டேஸ்ட்… தாய்லாந்தில் அதிகாரி செய்த காரியம்… வைரல் வீடியோவால் ஆப்பு… ம .பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்செயின் நகராட்சி மன்றத்தின் கட்டட அதிகாரியான ராஜ்குமார் ரத்தோர், தனது மனைதியுடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா…

39 minutes ago