Categories: சினிமா

பாட்ஷாவை விட அண்ணாமலைதான் பெஸ்ட்… காரணத்தை சொல்லி ரஜினியையே வியக்க வைத்த மணிகண்டன்!

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.  அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில்  நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது.

மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.

மணிகண்டனின் நடிப்பைப் போலவே அவரது நேர்காணல் பேச்சுகளும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. விஷயங்களை, சம்பவங்களை அவர் எடுத்துரைக்கும் பாங்கு ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “காலா படத்தின் போது ரஜினி சார் எல்லோரிடமும் அவர் படங்களில் மிகவும் பிடித்தது எது எனக் கேட்டார். அனைவருமே பாட்ஷா என்றார்கள். நான் ‘அண்ணாமலை’ என்று சொன்னதும், ஏன் உனக்கு மட்டும் அண்ணாமலை என்று கேட்டார். நான் அவரிடம் “சார் பாட்ஷா மிகப்பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் அண்ணாமலைதான் மிகப்பெரிய மனிதன்.

பாட்ஷா போராடுவது எதிரியோடு. ஆனால் அண்ணாமலை எதிர்ப்பது அவனது நண்பனைதான். கடைசியில் அவனை என்ன செய்ய முடியும்? அதனால் அண்ணாமலை ஒரு கட்டத்தில் அவனின் சொத்து பத்திரங்களை எல்லாம் அம்மாவிடம் கொடுத்து அவனிடமே கொடுக்க சொல்லிவிடுவான். அந்த இடத்தில் அண்ணாமலை மிகப்பெரிய மனிதன் ஆகிவிடுகிறான்’ என்றேன். அதைக் கேட்டு சிரித்த அவர் “சூப்பர்.. அண்ணாமலை ரொம்ப நல்ல படம்…” என பாராட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago