தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா அதன் பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் உடனே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார்.
சிம்புவுடன் அவர் நடித்த வல்லவன் திரைப்படம் அவரை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. அவருடனான காதல் மற்றும் முத்தக் காட்சிகள் இணையத்தில் வெளியானது எல்லாம் அவரைச் சுற்றி ஒரு சர்ச்சை வளையத்தை உருவாக்கின. அது அவரின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.
அதன் பின்னர் சிம்புவை பிரிந்த அவர் பிரபுதேவாவைக் காதலித்து அவரோடு ஒன்றாக வாழ்ந்தார். அப்போது பிரபுதேவாவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் அது தெரிந்தும் நயன்தாரா அவரைக் காதலித்தார். பிரபுதேவா, நயன்தாராவைத் திருமணம் செய்த்கொள்வதற்காக தன் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
இது சம்மந்தமாக அப்போது நயன்தாரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் பிரபுதேவாவுடனான காதலும் பிரிந்து இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டு தற்போது நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
பிரபு தேவாவுடனான காதல் முறிவுக்கு வந்தபோது நயன்தாரா விரக்தியில் இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து மும்பையில் போய் வசித்தார். அங்கேயே செட்டில் ஆகிவிடும் எண்ணத்திலும் இருந்தார். அப்போது அவரை சந்தித்து அவரிடம் ‘ராஜா ராணி’ படத்தின் கதையை சொல்லி அவரின் மனதை மாற்றி மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் அட்லிதான்.
ராஜா ராணி திரைப்படமும் காதல் தோல்விக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றிய பேசிய படம் என்பதால் நயன்தாராவுக்கு அந்த கதை மிகவும் எமோஷனலான ஒன்றாக இருந்திருக்கும். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்துதான் தமிழ் சினிமாவில் நயன்தாராவின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது என சொல்லலாம். அதன் பின்னர்தான் அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் ஆனார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…