“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

Spread the love

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்த 32 வயதான கார்த்திக் என்ற இளைஞர் மீது, கடந்த 2024-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாகப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டது. தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கார்த்திக் காவல்துறையினரிடம் எவ்வளவோ எடுத்துரைத்தும், அதனை ஏற்க மறுத்த மேட்டூர் மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட பொழிக் பழியைத் துடைத்தெறிய துணிச்சலான முடிவொன்றைக் கார்த்திக் எடுத்தார். ஜாமீனில் வெளியே வந்தால் தன் மீதான களங்கம் அப்படியே நிலைத்துவிடும் என்று கருதிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் கோராமல் சிறையிலேயே இருக்க முடிவு செய்தார். “நான் நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்” என்பதில் உறுதியாக இருந்த அவர், சிறைவாசத்தை சகித்துக்கொண்டு சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பிறந்த ஆண் குழந்தை, அச்சிறுமி மற்றும் கார்த்திக் ஆகிய மூவருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது.

ஆய்வக முடிவுகள் வெளியான போது, அந்தக் குழந்தைக்கும் கார்த்திக்கும் எவ்வித மரபணுத் தொடர்பும் இல்லை என்பதும், அவர் முற்றிலும் நிரபராதி என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் கார்த்திக்கைக் குற்றமற்றவர் என்று அறிவித்து வழக்கிலிருந்து விடுதலை செய்தது. “நீதி வென்றுவிட்டாலும், ஒரு நிரபராதியின் இரண்டு ஆண்டுகால இளமையும், உழைப்பும் காவல்துறையின் அவசரக் கைதால் வீணடிக்கப்பட்டதை யார் ஈடுசெய்வது?” என்ற கேள்வியுடன் இந்தச் சம்பவம் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

SATHISH R

Recent Posts

விஜய் அலைக்கு இபிஎஸ் வைத்த 365 நாள் செக் பாயிண்ட்… அதிமுகவிலிருந்து விலகியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…

37 seconds ago

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

8 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

13 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

16 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

16 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

17 minutes ago