“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

Spread the love

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய இருவரும் மதுப்பழக்கத்தால் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள காரை ஊராட்சியில் அமைந்துள்ள சேமந்தாங்கள் ஏரிப் பகுதிக்குச் சென்று இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, யார் மது வாங்கித் தருவது மற்றும் யார் அதிக அளவு மது அருந்துவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அருள்மணி, மணிகண்டனை பலவந்தமாக இழுத்துச் சென்று ஏரிச் சேற்றில் அமுக்கியுள்ளார். இதனால் மணிகண்டன் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் இறந்ததை உணர்ந்த அருள்மணி பயத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மணிகண்டனின் சடலத்தைப் பார்த்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த அருள்மணியைக் கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனே நண்பனைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“வழக்கை வாபஸ் வாங்க மிரட்டுறாங்க…!” – வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த… அமைச்சர் மரிய வில்சனின்… சகோதரர் போட்ட பரபரப்பு குண்டு…!!

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…

25 minutes ago

“முதல் வெற்றிக்கே இப்படி முக்குது…? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேரம் சரியில்லை… கம்பீர் எடுத்த முடிவு சரியா…? மான்செஸ்டரில் அடுத்த மரண அடி…!”

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…

30 minutes ago

தவெக ஆட்சி கவிழ்கிறது?… தமிழகத்தில் காலையிலேயே பெரும் பதற்றம்… நீதிமன்றம் எடுத்த திடீர் திருப்ப முடிவு…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…

37 minutes ago

பாவம் சஞ்சு சாம்சன்… நடு மைதானத்தில் நின்றபடி புலம்பல்…! கோபமாக கண்டித்த கவுதம் கம்பீர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…

40 minutes ago

“நான் எதிர்க்கட்சியாகவே இருந்துடுறேன்”…. இபிஎஸ் ரகசியத்தை உடைத்த கிருஷ்ணசாமி…. பின்னணியில் இருக்கும் ‘அதிகார’ அரசியல்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…

41 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மைதான்..? எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியத்தை உடைத்த.. EX MLA சத்யபாமா… அரசியலில் பரபரப்பு…!!”

முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…

46 minutes ago