“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

Spread the love

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20 உலகக் கோப்பை நாயகருமான சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராகக் களம் இறக்கப்பட்டார். அணியில் தனக்கு இடம் மறுக்கப்பட்டதால் சஞ்சு சாம்சன் மிகுந்த ஏமாற்றமடைந்ததாகத் தெரிகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் மிகவும் ஆவேசமாக விவாதிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அணியில் இருந்து நீக்கப்பட்ட முடிவுக்கு தனது கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் சாம்சன் வெளிப்படுத்துவது போலவும், அதற்கு கம்பீர் விளக்கம் அளித்து, சாம்சனின் தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்து அவரை சமாதானப்படுத்த முயல்வது போலவும் அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன. அவர்களுக்குள் என்ன பேசப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை என்றாலும், சாம்சனின் உடல் மொழி அவரது கோபத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஆச்சரியப்படும் விதமாக, போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சியின் போது தனக்குப் பதிலாக வைபவ் விளையாடப் போகிறார் என்பதை அறிந்திருந்தும், சஞ்சு சாம்சன் அந்த இளம் வீரரை அழைத்து அவரது தோளில் கைபோட்டு நம்பிக்கையூட்டி ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த அறிமுகப் போட்டியில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் உட்பட 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இடையேயான இந்த காரசாரமான விவாத வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

விஜய் அலைக்கு இபிஎஸ் வைத்த 365 நாள் செக் பாயிண்ட்… அதிமுகவிலிருந்து விலகியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…

2 minutes ago

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

9 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

14 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

17 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

17 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

18 minutes ago