Categories: சினிமா

போடு வெடிய.. GOAT சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ரஜினியின் வேட்டையன்.. யாருமே எதிர்பார்க்காத அதிரடி வசூல்..!

Spread the love

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பகத் பாஸில், அமிதாப் பச்சன், அபிராமி, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேட்டையன் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. சூப்பர் ஸ்டாரின் படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். காலை 9 மணிக்கு வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பானது.

தமிழ்நாட்டில் மட்டும் 900 திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் வேட்டையன் திரைப்பட முதல் காட்சியை பார்த்தனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜயும் மாறுவேடத்தில் வந்து வேட்டையன் திரைப்படத்தை பார்த்து சென்றார். திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. முதல் நாளில் இந்த திரைப்படம் உலக அளவில் 77.90 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 25 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இரண்டாம் நாளில் உலக அளவில் 100 கோடி என்ற இமாலய வசூலை கடந்துள்ள வேட்டையன் திரைப்படம் மற்றொரு மாஸ் சாதனையை படைத்துள்ளது. அதாவது புக் மை ஷோவில் இரண்டாம் நாளில் அதிக டிக்கெட் விற்பனையான படங்கள் பட்டியலில் கோட் திரைப்பட சாதனையை வேட்டையன் திரைப்படம் முறியடித்துள்ளது. அதாவது கோட் திரைப்படத்திற்கு இரண்டாம் நாளில் 3,94,000 டிக்கெட் விற்பனையான நிலையில் வேட்டையன் படத்திற்கு அதைவிட 35 ஆயிரம் டிக்கெட் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 4,29,000 டிக்கெட் விற்பனை செய்து கோட் திரைப்பட சாதனையை வேட்டையன் திரைப்படம் சொல்லி தள்ளியாக நொறுக்கியுள்ளது. மேலும் இரண்டாம் நாளில் 45 கோடி வசூல் செய்து இதுவரை 123 கோடிக்கு மேல் வேட்டையன் திரைப்படம் வசூல் செய்துள்ளது.

 

Nanthini

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

16 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

24 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

30 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

42 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

59 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago