தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே படம் கட்டாயம் ஹிட் ஆகும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்தத் திரைப்படங்களில் வடசென்னை படத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்து சூப்பர்ஹிட் கொடுத்தது. வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் உடன் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா மற்றும் டேனியல் பாலாஜி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அது மட்டுமல்லாமல் சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. வடசென்னை திரைப்படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாவத்திற்கான லீடு கொடுத்து தான் முடித்திருந்தார்கள். அதன்படி இரண்டாம் பாகம் தனுஷ் நடித்த அன்பு கதாபாத்திரத்தின் எழுச்சியை பற்றி பேசும் என கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை 2018 ஆம் ஆண்டிலேயே வெற்றிமாறன் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ஆரம்பிக்கப்படும் என வெற்றிமாறனிடம் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகி விட்டதால் வடசென்னை 2 படத்தில் இருந்து இவர்கள் இருவரும் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறனுக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் வடசென்னை 2 படத்தை இயக்க உள்ளதாகவும் தனுசுக்கு பதில் குடும்பஸ்தன் திரைப்படப் புகழ் நடிகர் மணிகண்டனை வைத்து வடசென்னை 2 படத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என ஹார்ட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன் வடசென்னை 2 படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…