மரண விளிம்பில் 192 மணி நேரம்…. 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வந்த அதிசயம்….. வெனிசுலாவையே கண்ணீரில் நனைய வைத்த மீட்புச் சம்பவம்….!

Spread the love

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அங்கிருந்து கிடைத்துள்ள ஒரு நெகிழ்ச்சியான செய்தி பேரழிவைச் சந்தித்த மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஒளியையும் தந்துள்ளது. லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள ‘கலெரியாஸ் பிளாயா கிராண்டே’ வணிக வளாகத்தில் இரவு நேரப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 43 வயதான ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் என்பவர், நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, சுமார் 8 நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்துள்ள அவரது இந்தச் உயிர்வாழ்க்கைப் போராட்டம் உலகையே நெகிழ வைத்துள்ளது.

கடந்த ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட துயரமான தருணத்தில், ஹெர்னான் தனது சிறிய பாதுகாப்பு கேபினுக்குள் இருந்துள்ளார். சுற்றியிருந்த பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடம் இடிந்து தரைமட்டமான போதிலும், அவர் இருந்த அந்தச் சிறிய கேபின் மட்டும் உடையாமல் பலமாகத் தாக்குப் பிடித்துள்ளது. இதுவே அவர் மீது பெரும் இடிபாடுகள் நேரடியாக விழுந்துவிடாமல் தடுத்து, அவர் சுவாசிப்பதற்கான காற்றையும் வழங்கி, 8 நாட்களாக அவரது உயிரைக் காக்கும் அரணாகச் செயல்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு, கோஸ்டாரிகா நாட்டின் செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் அவர் உயிருடன் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்தனர். அந்த இக்கட்டான சூழலிலும், “நான் ஒருவேளை இங்கிருந்து உயிருடன் மீட்கப்படாமல் இறந்துவிட்டால் என் மனைவி தாங்க மாட்டார், எனவே நான் உயிருடன் இருக்கும் விஷயத்தை இப்போதைக்கு அவரிடம் சொல்ல வேண்டாம்” என்று ஹெர்னான் உருக்கமாகக் கேட்டுக்கொண்டது மீட்புக் குழுவினரையே உருக வைத்துள்ளது.

சிலி நாட்டின் தீயணைப்பு வீரர்கள், அமெரிக்கா, போர்ச்சுகல், மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளின் சர்வதேச மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து இரவு பகலாகப் போராடி இந்த இமாலய மீட்புப் பணியைச் சாத்தியமாக்கியுள்ளனர். 8 நாட்களுக்குப் பிறகு ஹெர்னான் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டதைக் கண்ட அவரது மனைவி கஸ்பிமார் கோன்சலஸ், “பல நாட்கள் நம்பிக்கையிழந்து தவித்தேன், அவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி இருண்ட என் வாழ்க்கையில் ஒரு ஒளிக் கீற்றாக வந்துள்ளது” என்று கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார். 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட இந்தத் தம்பதியின் வாழ்வில், சர்வதேச மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பும் ஹெர்னானின் அசாத்திய மனதிடமும் மீண்டும் ஒரு புதிய வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“அம்மாவின் காதலன்…” மனைவியுடனும் பழக்கம்…. இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய கொடூரம்…. மகளின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மை… பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…

25 seconds ago

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

19 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

55 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

1 மணத்தியாலம் ago