Categories: சினிமா

‘வள்ளிமயில்’ பட டீசர் விழாவுக்கு செருப்பு போடாமல் வர இதுதான் காரணம்…  நடிகர் விஜய் ஆண்டனி சொன்ன ‘பளீச்’ பதில் …

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர்  தன் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர் என்றால் அது மிகையாகாது.

அதில் ஒன்று தான் அவரது மூத்த மகளின் இறப்பு. நடிகர் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் இந்த இழப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மகளின் இறப்பை தொடர்ந்தும், தற்பொழுதும் இவர் பாசிட்டிவாக திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில் ரெட்டி, விஜய் டிவி நிஷா, மற்றும் youtube பிரபலமான ஜி பி முத்து போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். நல்லசாமி பிச்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் ‘வள்ளி மயில்’ படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘வள்ளிமயில்’ பட டீசர் விழாவிற்கு காலில் செருப்பு கூட போடாமல் நடிகர் விஜய் ஆண்டனி வந்த விவகாரம் தான் தற்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த விழாவில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது  ‘எனக்கு எது தோணுதோ அதை செய்வேன். திடீர்னு தோணுச்சு. செருப்பு போடுறத ஸ்டாப் பண்ணிட்டேன். போடணும்னு தோணுச்சுன்னா உடனே start பண்ணிடுவேன்’ என்று கூலாக பதில் அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

28 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

32 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

41 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago