சமீப காலமாகவே சினிமா உலகில் 90களில் வலம் வந்த முன்னணி நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது நடிகை ரவளியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு மாறி இருக்கிறார் நடிகை ரவளி.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரவளி சிறு வயதிலிருந்து நடிப்பின் மீது ஆர்வம் அதிக இருப்பதால் முறையாக நடன நாட்டியம் பயின்றார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 1990 இல் ‘ஜட்ஜ்மெண்ட்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலில் அறிமுகமானார். இருப்பினும், அவர் தெலுங்கு திரைலகில் நடித்த படத்தின் மூலம் தான் பிரபலமானார்.
தமிழ் திரையுலகில் ‘பட்டத்து ராணி’ என்ற திரைப்படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், ‘புத்தம்புது பூவே’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அவருக்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் தெலுங்கு பக்கம் போனார் நடிகை ரவளி. பின்னர், மீண்டும் தமிழில் வந்த நடிகை ரவளி ‘கண்மணியே மறவாதே’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும், கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான ‘கரிசக்காட்டு பூவே’ திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் மூலமும் பிரபலமடையாத நடிகை ரவளி பவித்ரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘திருமூர்த்தி’ என்ற படத்தில் நடித்ததன் மூலமே தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். இந்தப் படம் ஆக்சன் படமாக இருந்தது, இந்த படத்தின் நடித்ததன் மூலமே நடிகை ரவளி ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
அதன் பிறகு தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளாக நடிக்க ரவளி வரவே இல்லை, இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில், 2007ஆம் ஆண்டு நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு திரையுலகில் நடித்துள்ளார். இவருக்கு குழந்தைகள் பிறந்ததும் 2011 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு துறை நடிப்பிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அவருக்கு தெலுங்கு துறையிலே பல பட வாய்ப்புகள் வந்த நிலையிலும் குடும்பத்தை கவனிப்பதையே முழு வேலையாக வைத்து நடிக்க விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் தற்போது நடிகை ரவளியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…