தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் தன் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர் என்றால் அது மிகையாகாது.

அதில் ஒன்று தான் அவரது மூத்த மகளின் இறப்பு. நடிகர் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் இந்த இழப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மகளின் இறப்பை தொடர்ந்தும், தற்பொழுதும் இவர் பாசிட்டிவாக திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில் ரெட்டி, விஜய் டிவி நிஷா, மற்றும் youtube பிரபலமான ஜி பி முத்து போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். நல்லசாமி பிச்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் ‘வள்ளி மயில்’ படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘வள்ளிமயில்’ பட டீசர் விழாவிற்கு காலில் செருப்பு கூட போடாமல் நடிகர் விஜய் ஆண்டனி வந்த விவகாரம் தான் தற்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த விழாவில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது ‘எனக்கு எது தோணுதோ அதை செய்வேன். திடீர்னு தோணுச்சு. செருப்பு போடுறத ஸ்டாப் பண்ணிட்டேன். போடணும்னு தோணுச்சுன்னா உடனே start பண்ணிடுவேன்’ என்று கூலாக பதில் அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ…
