சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற கனவோடு இருந்து வரும் பலரும் தங்கள் திறமைகளை youtube, இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி திறமையை வெளிப்படுத்தும் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றனர். யூடியூபில் வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை தீபா என்ற பௌலன் ஜெசிக்கா.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இதன் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘வாய்தா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது அவர் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய அப்பார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு அவர் தனது அப்பார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலை எடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் பட வாய்ப்புகள் இல்லாமையால் தற்கொலை செய்து கொண்டதாக ஜெசிக்கா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…