Connect with us

CINEMA

‘உயிரே’ படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களிலும் உள்ள ஒரு ஒற்றுமை.. வரிகளில் மாயாஜாலம் காட்டிய வைரமுத்து..

நடிகர் ஏ.ஆர்.ரகுமான்.. இசையில் ஒரு ஜாம்பவான். 1992-ம் ஆண்டு தொடங்கி இன்று வரையிலும் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று இன்றும் இசை உலகில் தவிர்க்க முடியாதவராய் இருந்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போக்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, மணிரத்னம் படம் இயக்க, வைரமுத்து வரிகள் அமையும் படங்கள் அனைத்திலுமே பாடல்கள் எப்போதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும்.

#image_title

   

ரோஜா படத்தில் தொடங்கிய மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணி இன்று வரையிலும் பல படங்களில் தொடர்ந்து வருகிறது. இவர்கள் மூவரும் இணையும் ஒரு படம் தோல்வி அடைந்தாலும் கூட, அப்படத்தில் இடம்பெறும் அத்தனை பாடல்களும் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். உதாரணத்திற்கு திருடா திருடா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவினாலும் கூட, இந்தப் படத்தில் இடம் பெற்ற, கொஞ்சம் நிலவு, ராசாத்தி, வீரபாண்டி கோட்டையிலே, புத்தம் புது பூமி, கண்ணும் கண்ணும், தீ தீ போன்ற அனைத்து பாடல்களும் இன்று வரையிலும் அனைவரது பிளே லிஸ்டிலும் இடம் பெறும்.

#image_title

குரு, உயிரே, ராவணன், பாம்பே, இப்படி பல படங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர்கள் மூவரும் கடைசியாக, செக்கச் சிவந்த வானம் படத்தில் இணைந்திருந்தனர். அடுத்த படத்திலும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றிய உயிரே படத்திலிருந்து ஒரு சுவாரஸியமான விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியூர் ஆட்டக்காரர்களை மக்கள் ரசிப்பார்களா? என்ற கேள்விக்கு கதை நன்றாக இருந்தால் நிச்சயம் ரசிப்பார்கள் என்று பதிலளித்தது உயிரே திரைப்படம்.

#image_title

ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இன்று நாம் கூறும் பான் இந்தியா எனப்படும் திரைப்படங்களை 1998-லேயே காட்டியவர் மணிரத்னம். ஹிந்தியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது. இப்படத்திற்கு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார், பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இருக்கும் சுவாரஸியமான விசயம் என்னவென்றால் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களிலும் உயிர் என்ற வார்த்தை நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top