உதயநிதி ஸ்டாலின் அறையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா… கோட்டையில் நடந்த ‘அந்த’ சென்டிமென்ட் மாற்றம்… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு..!!

Spread the love

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்துள்ள சூழலில், இதுவரை 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுத் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் பதவியேற்பு விழா முடிந்தும் இலாகாக்கள் ஒதுக்கப்படுவதில் தாமதம் நீடித்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று பணிகளைத் தொடங்கினர்; குறிப்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் அறைகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இப்புதிய அமைச்சரவையில் தவெகவின் முக்கிய முகமான ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக, இத்துறையை அவரே முதலமைச்சரிடம் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முறைப்படி தனது பணிகளைத் தொடங்கினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, முந்தைய திமுக ஆட்சியில் முன்னாள் துணை முதலமைச்சராகவும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய அதே அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு வந்த ஆதவ் அர்ஜுனா, உடனடியாகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார். முந்தைய அரசு பாதியில் நிறுத்தியுள்ள திட்டங்களின் நிலை, அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தவெகவின் புதிய தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் களம் கண்ட ஆதவ் அர்ஜுனா, சுமார் 66,400 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை விடச் சுமார் 17,300 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்தார். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Muthu Mani

Recent Posts

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

5 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

14 minutes ago

“CM விஜய் சொன்ன ‘தூய சக்தி’ அரசியல் இதுதானா…?” – சொந்தக் கட்சியிலேயே வசூல் வேட்டை..?! கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன் அதிர்ச்சி குற்றச்சாட்டு…!!

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…

20 minutes ago

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

10 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

10 மணத்தியாலங்கள் ago