கட்சியின் சீனியர்களுக்கு ‘கட்டுப்பாடு’.. அப்செட்டில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்?…. விஜய் எடுத்த அதிரடி முடிவால் செம ஷாக்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் கட்சியில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் போன்ற சீனியர் தலைவர்கள் ஊடக விவாதங்களில் கலந்துகொள்வதற்கும், கட்சி விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதற்கும் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒழுங்கு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த ‘வாய்ப்பூட்டு’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடிகர் விஜய் எதிர்கொண்டு வரும் டெல்லி சிபிஐ விசாரணை மற்றும் அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டில் நிலவும் தணிக்கை சிக்கல்கள் குறித்து நிர்வாகிகள் யாரும் தன்னிச்சையாகப் பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாகப் பகிரப்படும் பதிவுகளை ரீட்வீட் செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தலைமையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தாண்டி நிர்வாகிகள் பேசும் கருத்துக்கள், கட்சிக்குத் தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே அதிக அளவில் பேட்டிகள் கொடுத்து வந்த நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு, இந்த திடீர் கட்டுப்பாடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜெயலலிதா காலத்தில் கூட கருத்துச் சுதந்திரம் இருந்ததாகவும், ஆனால் புதிய கட்சியில் இவ்வளவு சீக்கிரம் சென்சார் முறை கொண்டு வரப்பட்டிருப்பது ஜனநாயகமற்ற செயல் என்றும் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாக எழும் விமர்சனங்கள் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… டிராக்டர் வருது ஓடுங்க… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நொடியில் நடந்த கொடூரம்… சிறுமி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…

51 seconds ago

அட கொடுமையே… நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து… வாலிபர் பரிதாப பலி… புனே நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்…!

புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…

8 minutes ago

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

19 minutes ago

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

10 மணத்தியாலங்கள் ago