“மாடர்ன் மனுநீதிச் சோழனா..? நாகராஜசோழன் ஆட்சியா..?” பாலியல் புகார்களில் சிக்கும் தவெக நிர்வாகிகள்… திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஐடி விங்க்..!!

Spread the love

தவெக நிர்வாகிகளின் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளது. ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தையும், சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வீடியோ எடுத்து மிரட்டியதாக வெளியாகும் செய்திகளையும் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர வன்கொடுமைகளைச் சுட்டிக்காட்டி, தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் மீது அதிமுக தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவங்களை முன்வைத்து தற்போதைய திமுக அரசை கடுமையாக சாடியுள்ள அதிமுக ஐடி விங்க், “இதுதான் ‘மாடர்ன் மனுநீதிச் சோழன்’ ஆட்சியா?” என்றும், இத்தகைய அவலங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்த ஆளுங்கட்சிக்கு வெட்கமே இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அமைதிப்படை ‘நாகராஜசோழன்’ பாத்திரத்தை விட கேவலமான ஒரு ஆட்சி தான் இங்கு நடப்பதாக விமர்சித்துள்ள அவர்கள், கடந்த ஒரு மாத காலமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே தொடர்ச்சியாக கொடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தன் மீது வீண் பழி சுமத்துவதாகக் கூறும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் வினவியுள்ளனர்.

ஆளுங்கட்சி என்றால் சகல குற்றங்களையும் செய்யலாம், சட்டத்தை மீறலாம் என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை என்பதையே இது காட்டுவதாகவும், ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ துவக்க விழாவில் முதலமைச்சர் பேசியதை அவரது கட்சியினரே மதிக்கவில்லை என்றும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், முதலமைச்சர் முதலில் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் தனி மனித ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதுவே பாதி குற்றங்களைக் குறைத்துவிடும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், மேற்கூறிய பாலியல் வழக்குகளில் தொடர்புடைய ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறை உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஐடி விங்க் வலியுறுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago