தமிழக வெற்றிக் கழகத்தின் பேராவூரணி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திர காண்டீபன் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்தத் தகவல்கள் பொய்யானவை என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தனது மனைவி மற்றும் மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அரசியலில் இதுபோன்ற சவால்கள் இயல்பு என்றும், தான் மக்களிடம் உண்மை நிலையை விளக்குவதாகவும் கூறி கட்சித் தலைவர் விஜய் தனக்கு ஆறுதல் அளித்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் .
சந்திர காண்டீபன் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் என்றும், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கறிஞரைத் தாக்கியதற்காகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், இதுபோன்ற சர்ச்சைகள் தவெக கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…