தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என eps-க்கு கெடு விதித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை நீக்கியது தொடர்பாக பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இபிஎஸ் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறார், அவர் வீழ்ந்து விடுவார் என்ற டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல, எடப்பாடி திமுக (EDMK) என விமர்சித்த அவர், செங்கோட்டையன் தீவிரமான அதிமுக தொண்டன், ஒரு திறமையான நிர்வாகி, அவரை நீக்கும் அளவுக்கு இபிஎஸ்-க்கு தகுதி இல்லை என்றும் கொந்தளித்தார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி திமுக வீழ்த்தப்படுவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…
கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் நீண்டகாலமாக புகைந்து கொண்டிருந்த அதிருப்தியை தற்போது எரிமலையாக வெடிக்கச்…