தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் சீசனில் பங்கேற்ற போது, லோனாவாலாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீடு அமைந்திருந்ததால் நள்ளிரவில் புலி மற்றும் பாம்புகளின் நடமாட்டம் இருந்ததாகவும், இருப்பினும் தொகுப்பாளர் ஜூனியர் என்.டி.ஆருடன் பழகியது அந்த நாட்களை சுவாரஸ்யமாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கடந்த 2024-ல் பிக்பாஸ் சீசன் 8-க்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த ஹரிதேஜாவிற்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. முதல் சீசனில் அவருக்குக் கிடைத்த நற்பெயர் இந்த சீசனில் முழுமையாகச் சிதைந்துவிட்டதாகவும், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு அவர் மீது வீசப்பட்ட கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதள ட்ரோல்களால் அவர் நிலைகுலைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரோல்கள் தனக்குக் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். “இந்த ஜென்மத்தில் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் போகமாட்டேன், அந்தப் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டேன்” என்று கூறியுள்ள அவர், தற்போது அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கே தனக்குச் சலிப்பாக இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சந்தியா ஷர்மா (28) என்ற ஆசிரியை வகுப்பறையில் பாடம்…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…