ஜெய்ப்பூரில் அஜ்மீர் சாலையிலுள்ள 200 அடி புறவழிச்சாலையில், சாலையோரத்தில் பலூன்கள் மற்றும் இதர பொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு ஏழைக் குடும்பத்தின் மீது அதிவேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மூன்று அப்பாவி குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் கோரத்தால் தடுப்புக்கம்பிகளை உடைத்துக் கொண்டு நூறு மீட்டர் தூரம் பாய்ந்த அந்த வாகனம், சாலையோரத்தில் அமர்ந்திருந்தவர்களின் மீது ஏறியது. இந்த கொடூர மோதலில் குழந்தைகளின் தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிவேகமாக வந்த வாகனம் மோதிய வேகத்தில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியே சில நிமிடங்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளானது. விபத்து நடந்த உடனே ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து, காயமடைந்த பெண்ணை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது விபத்துக்குக் காரணமான வாகனத்தைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையான ஓட்டுதலும், அதிவேகமுமே இந்த கோர விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவநஹள்ளியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்…
சமீபகாலமாக பல பகுதிகளில் வீதிகளில் திரியும் தெருக்காளைகளால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்,…
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டிகளில் தனது அறிமுக அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு…
மழைக்காலத்தில் ஆறுகளில் நிலவும் பேராபத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், உத்தராகண்ட் காவல்துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான 'தமிழா தமிழா' நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். சமூகம் சார்ந்த…
மிஸோரம் மாநிலத்தில் கல்வித் துறை சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வு வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றாகக் கூடி…