தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பணியில் இருந்து வரும் ஆசிரியர்களும், புதிதாக ஆசிரியர் பணிக்குத் தயாராகி வருபவர்களும் ஆர்வத்துடன் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெட் (TET) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (ஏப்ரல் 10) மாலையுடன் நிறைவடைகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இதற்கான தகுதித் தேர்வுகள் ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்விற்குத் தயாராகும் ஆசிரியர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…