தமிழகம் முழுவதும் ஜூலை 12 நாளை 3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பினாலும் குரூப்-4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கு இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி தான் என்றாலும் கூட டிகிரி மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிறுவப்பட உள்ளது. நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் குரூப் 4 வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள TNPSC தலைவர் பிரபாகர் வினாத்தாள் கசியவில்லை என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நாளை குரூப்-4 தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்ட விவாகாரமானது சர்ச்சையானது. தனியார் பேருந்து கதவுக்கு வெளியில் வெறும் ஒரு A4 சீட்டில் சீல் வைத்து அனுப்புவதா? எனவும் கேள்வி எழுப்பட்டிருந்தது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…