அதிர்ச்சியில் தேர்வர்கள்..! குரூப் 4 வினாத்தாள் லீக்கானதா..? விளக்கம் கொடுத்த TNPSC தலைவர்..!!

By Soundarya on ஆடி 11, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் ஜூலை 12 நாளை 3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பினாலும் குரூப்-4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கு இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி தான் என்றாலும் கூட டிகிரி மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிறுவப்பட உள்ளது. நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் குரூப் 4 வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள TNPSC தலைவர் பிரபாகர் வினாத்தாள் கசியவில்லை என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நாளை  குரூப்-4 தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்ட விவாகாரமானது சர்ச்சையானது. தனியார் பேருந்து கதவுக்கு வெளியில் வெறும் ஒரு A4 சீட்டில் சீல் வைத்து அனுப்புவதா? எனவும் கேள்வி எழுப்பட்டிருந்தது.