தமிழ் சினிமாவில் தன்னிகரில்லாத நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தான் அறிமுகமான பராசக்தி என்ற திரைப்படத்திலேயே மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றவர். அதன் பிறகு பட திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக பல ஆண்டுகள் கோலோச்சினார். இவர் முதலில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்தார்.
மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியின் வேடத்தில் நடித்ததால் தந்தை பெரியார், கணேசன் என்ற பெயருக்கு முன்னால் சிவாஜி என்ற பெயரை சூட்டினார். அப்போதிலிருந்து இவருடைய பெயர் சிவாஜி கணேசன் என்றானது. ஆனால் இவரை அனைவரும் நடிகர் திலகம் சிவாஜி என்று தான் அழைப்பார்கள்.
நடிகர் திலகம் என்ற பட்டம் இவருக்கு எப்படி வந்தது என்பதற்கு பின்னால் சுவாரஸ்ய தகவல்கள் நிறைந்துள்ளன. அதாவது சிவாஜி கணேசன் மிக புகழ்பெற்ற நடிகராக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த சினிமா பத்திரிக்கையான பேசும் படத்திற்கு பல வாசகர்கள் இருந்தனர். அதில் ஒரு வாசகர் சிவாஜியின் அபாரமான நடிப்பை புகழ்ந்து அவரை நடிகர்களுக்கெல்லாம் திலகம் என்று பாராட்டி ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1957 ஆண்டு வெளியான அம்பிகாபதி திரைப்படத்தில் சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் எக்கச்சக்கமான பட்டங்கள் வாங்கி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயர் தற்போதும் தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…