தற்பொழுது நடிகர் கருணாஸ் தன்னுடைய மனைவி மகன் மற்றும் மகளுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் கருணாஸ் தன்னுடைய இயல்பான கிராமத்து நடை பேசும் காமெடியால் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் முதலில் காமெடியனாக நடிக்கவில்லை. தஞ்சாவூர் திருவாடணையில் இருந்து சென்னை வந்த கருணாஸ் நந்தனம் கல்லூரியில் டிகிரி படித்துள்ளார். அங்கு படிக்கும்போது நாட்டுப்புறப்பாடல்களின் மீது ஆர்வமாக இருந்து அதனை கற்றுக் கொண்டார்.
பின்னர் சினிமாவில் சில பாடல்களும் பாடினார் ஒரு கல்லூரியின் விழாவில் பாடச் சென்றிருந்தபோது ‘கிரேஸ்’ என்னும் நாட்டுப்புறப் பாடகியுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிரேஸ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார்.
இவர்களுக்கு ‘கேன்’ எனும் மகனும் ‘டயானா’ எனும் மகளும் உள்ளார்கள். இவரது மகன் கேன் கருணாஸ் ‘அழகு குட்டி செல்லம்’ என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இப்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் கருணாஸின் மகன். தற்பொழுது கருணாஸ் அவரது மனைவி மகள் மற்றும் மகனும் இருக்கும்படியான குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ‘கருணாஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…