திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து ஆடுகளைத் திருடிச் சென்றதாக சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு வாணியம்பாடி போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது இவருக்கே அரசு தரப்பு வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சட்டத்துறையினர் இடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட அஞ்சலை (65) என்ற முதியவர், வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கணவர் மற்றும் மகன்களை இழந்துவிட்ட நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். முன்பு இந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தானின் மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்த அஞ்சலை, பின்னர் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். இந்தச் சூழலில், கடந்த 2025 செப்டம்பர் மாதம் அஞ்சலையின் ஆடு ஒன்று காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் மூலம் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் தனது கூட்டாளியுடன் காரில் வந்து ஆட்டைத் திருடியது அம்பலமானது.
இச்சம்பவம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பதவிகளைப் பெறுவதற்கு ஆளுங்கட்சியின் வழக்கறிஞர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கைமாறுவதாக உட்கட்சி நிர்வாகிகள் சிலரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழலையும் லஞ்சத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், இதுபோன்ற குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பது அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான நபர்களை ஆராய்ந்து நியமிக்காமல், முறைகேடான வழிகளில் பதவிகள் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும், இத்தகைய நியமனம் சட்டத்தின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது பரவலாக எழுந்துள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…