தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் என்ற பெயருடன் வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது விஜய் வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படமும் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள்.
லியோ திரைப்படத்தின் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது சில சமயங்களில் லோகேஷ் கனகராஜ் பாக்சிங் கற்றுக்கொண்டாராம். ஏதோ பொழுது போக்கிற்காக கற்றுக் கொண்டார் என்று எண்ணினால் அதற்கு பின்னால் ஒரு கதை இருக்கின்றது. லியோ திரைப்படத்தில் சண்டை மாஸ்டர்களாக பணியாற்றியவர் அன்பறிவு மாஸ்டர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் இயக்கப் போவதாகவும், அதில் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தில் லோகேஷ் கனகராஜ் பாக்ஸராக வரப்போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்காகத்தான் லோகேஷ் கனகராஜ் பாக்சிங்கை தீவிரமாக கற்றுக் கொண்டு வந்தாராம். இந்த திரைப்படம் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…