வறுமையின் கொடுமையால் கர்நாடகாவில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹல்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி திப்பண்ணா மற்றும் அவரது மனைவி கங்கம்மா ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போதைய சூழலில் விவசாயம் செய்வதற்குத் தேவையான காளை மாடுகளை வாங்கவோ அல்லது டிராக்டரை வாடகைக்கு எடுத்து நிலத்தை உழவோ இவர்களிடம் பணவசதி இல்லை. இதன் காரணமாக, வேறு வழியின்றி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் இணைந்து தங்களது நிலத்தை ஏர்கலப்பையால் உழுத சோகமான காட்சி பார்ப்போரின் நெஞ்சைக் கலங்கடித்துள்ளது.
நிலத்தை உழுவதற்காக மனைவி கங்கம்மா தனது கைகளில் கயிற்றைக் கட்டி முன்னின்று இழுக்க, கணவர் திப்பண்ணா ஏர்கலப்பையை அழுத்திப் பிடித்துப் பின்னால் நடந்து நிலத்தை உழுதுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தங்களுக்கு அரசிடமிருந்து எந்தவிதமான நிதியுதவியும் அல்லது சலுகைகளும் கிடைப்பதில்லை என்றும், வயிற்றுப் பிழைப்புக்காகவே இந்த இக்கட்டான நிலையிலும் விவசாயம் செய்வதாகவும் கண்ணீர் மல்கக் கூறும் இந்தத் தம்பதியினர், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…