மும்பை மற்றும் நாசிக் ஆகிய பகுதிகளில் பிரபல ஜோதிடராக வலம் வந்த அசோக் காரத் (56) என்ற போலி சாமியார், தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வந்துள்ளார். தனக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்ப வைத்த அவர், பக்தர்களின் மத நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும், தொழிலில் பெரும் லாபம் ஈட்டித் தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி, “அவதார பூஜைகள்” என்ற பெயரில் பலரிடம் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துள்ளார். மேலும், சிலரை மிரட்டியும் அவர் பணம் பறித்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் திருமணமான பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்தபோதே, கடந்த மே 19-ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் (ED) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கில் போலி சாமியார் அசோக் காரத், அவருடைய மனைவி உட்பட 6 பேர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறைப்படி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பக்தர்களிடம் ஏமாற்றிப் பறித்த கோடிக்கணக்கான பணத்தை, இரண்டு கூட்டுறவு கடன் சங்க ஊழியர் ஒருவரின் உதவியோடு, பல பினாமி கணக்குகளைத் தொடங்கி அசோக் காரத் பதுக்கியுள்ளார். பின்னர் அந்தப் பணத்தைக் கொண்டு நாசிக், அகமது நகர், சோலாப்பூர், புனே மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் தனது குடும்பத்தினர் பெயரில் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த மோசடி வலை அம்பலத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய போலி சாமியாருக்குச் சொந்தமான ரூ.36.90 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…