காரில் பேட்டரி காலி…” நடுரோட்டில் தவித்த பெண்… ” யூனிபார்ம் போட்டா மட்டும் போதாது… ஓடிவந்து ராணுவ வீரர் செய்த ‘அந்த’ காரியம்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!

Spread the love

மின்சார வாகனம் ஒன்றின் பேட்டரி தீர்ந்து நடுவழியில் தவித்த தீபிகா சர்மா என்ற பெண் வ்லாகருக்கு, நரேந்திர என்ற இந்திய ராணுவ வீரர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. தனது பயணத்தின் போது சார்ஜ் தீர்ந்துபோன காரை, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த ராணுவ வீரர் அருகில் இருந்த சார்ஜிங் ஸ்டேஷன் வரை தள்ளிச் சென்று உதவியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவிய ராணுவ வீரரின் மனிதநேயத்தைக் கண்டு நெகிழ்ந்துபோன தீபிகா, அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய ராணுவத்திற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் சல்யூட்டையும் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Da2xlb3TyVm/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

காரை சார்ஜிங் ஸ்டேஷனுக்கு தள்ளிச் சென்றதோடு நின்றுவிடாமல், அந்த வாகனத்தில் போதிய அளவு சார்ஜ் ஏறும் வரை சுமார் 30 நிமிடங்கள் அந்த வீரர் அங்கேயே காத்திருந்துள்ளார். அந்த பெண் பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்த பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். “இன்றைய சுயநல உலகில் இதுபோன்ற மனிதர்களைப் பார்ப்பது அரிது” என்று தீபிகா உருக்கமாகப் பதிவிட்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஆபத்துக் காலங்களில் எப்போதும் இந்திய ராணுவம் தான் மக்களைக் காக்கிறது” எனப் பாராட்டிப் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர்.

Visaka

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

29 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

52 minutes ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

1 மணத்தியாலம் ago