கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தில் வசிக்கும் பிராங்க்ளின் என்பவரது வீட்டில், திருடன் ஒருவன் புகுந்து விசித்திரமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வரும் பிராங்க்ளின், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த சமயத்தில், ஆரோக்கிய பிரவின் (38) என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.
திருடுவதற்குப் பதிலாக, வீட்டின் மின்விசிறியைப் போட்டுவிட்டு மெத்தையில் அசந்து தூங்கியுள்ளார் இந்த திருடன். இதற்கிடையில், திருடன் சுவிட்சை போட்டபோது தவறுதலாக குடிநீர் மோட்டார் சுவிட்சையும் ஆன் செய்துவிட்டதால், தண்ணீர் நிரம்பி வழிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பிராங்க்ளினின் மகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வீட்டின் பீரோவில் இருந்த 2 பட்டுப்புடவைகள் மற்றும் ரூ.1,000 ரொக்கத்தைத் திருடிய திருடன், தான் அணிந்து வந்த பேண்ட்டைக் கழற்றி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த பெண்களுக்கான ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த குளச்சல் போலீசார், ஆரோக்கிய பிரவினைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பவத்தன்று அதிகாலை அப்பகுதியில் கருவாடுகளைத் திருடித் தின்ற அவன், பின்னர் பிராங்க்ளின் வீட்டின் உள்ளே புகுந்ததும் தூங்கிவிட்டதாகக் கூறியுள்ளார். திருடன் அணிந்திருந்த லேடீஸ் பேண்ட் மற்றும் அவனது விசித்திரமான செயல் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஆரோக்கிய பிரவினிடம் இருந்து திருடப்பட்ட பட்டுப்புடவைகள் மீட்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச்…
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
நாட்டில் நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), சிஇயுஇடி (CUET) போன்ற முக்கியப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து வரும் விவகாரம்…
சிவகங்கை மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழு தலைவரும், அதிமுகவின் மாநில அம்மா பேரவை துணை செயலாளருமான பொன்.மணி பாஸ்கரன், அதிமுகவிலிருந்து…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப (IT)…