நாங்க அப்பவே சொன்னோம்.. இப்ப அப்படியே நடந்துடுச்சு…. “2 மாசத்துல கிளம்புங்க!” – 17 வருஷ பார்ட்னர கழட்டிவிட்ட ஜெராக்ஸ்.. நடுரோட்டில் நிற்கும் HCL ஊழியர்கள்….!

Spread the love

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறை ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்கவும், வேலைகளை ஆட்டோமேஷன் செய்யவும் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் விளைவாக, இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் நெருக்கடியும், பழைய ஒப்பந்தங்களை இழக்கும் அபாயமும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டபடியே, தற்போது ஒரு முக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் (HCL Tech), அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் (Xerox Corporation) நிறுவனத்துடனான தனது முக்கிய பிசினஸ் புராசஸ் மேனேஜ்மெண்ட் (BPM) ஒப்பந்தத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. செலவினங்களைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஜெராக்ஸ் நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. தற்போது ஹெச்சிஎல் வசம் உள்ள பணிகளை பிலிப்பைன்ஸில் உள்ள தனது சொந்த நிறுவனத்திற்கும், மீதமுள்ள சில பகுதிகளை அங்குள்ள மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கும் மாற்ற ஜெராக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்த முறிவின் காரணமாக, நொய்டா மையத்தில் பணியாற்றும் சுமார் 170 முதல் 200 ஹெச்சிஎல் ஊழியர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட உள்ளனர். இந்த ஊழியர்களை மாற்றுத் திட்டங்களில் பணியமர்த்த முடியாது என்று தெரிவித்துள்ள ஹெச்சிஎல் நிர்வாகம், ஜூன் மாத இறுதியுடன் இவர்களது பணி முடிவுக்கு வருவதாகவும், அதற்குள் வேறு வேலைகளைத் தேடிக்கொள்ளுமாறும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையே 17 ஆண்டுகால நீண்ட வணிக உறவு இருந்தபோதிலும், தற்போதைய பொருளாதாரச் சூழலால் இந்த பிபிஎம் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ஹெச்சிஎல் நிறுவனத்தின் அமெரிக்கத் துணை நிறுவனமும் புளோரிடாவில் உள்ள தனது ஆர்லாண்டோ கிளையில் சுமார் 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. மே 29 முதல் தொடங்கிய இந்த பணிநீக்க நடவடிக்கை டிசம்பர் 31 வரை தொடர உள்ளது. உலகளவில் நிறுவனங்கள் செலவுக் குறைப்பு மற்றும் ஏஐ ஆட்டோமேஷனை நோக்கி நகர்வதால், இந்திய ஐடி துறையிலும் அதன் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கலக்கமும், எதிர்காலம் குறித்த அச்சமும் தற்போதைய சூழலில் அதிகரித்துள்ளது.

Nanthini

Recent Posts

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

2 minutes ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

7 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

10 minutes ago

“காதலன் நினைவா.. இல்ல சைக்கோ தனமா?”.. ஓடும் ரயிலில் காதல் ஜோடியைப் பார்த்து வெறிபிடித்த இளம் பெண்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…

12 minutes ago

“நல்லா வருது.. வேண்டாம் விடுங்க”… ரீல்ஸ் பார்த்தவங்க எல்லாம் இப்போ நியூஸ் பார்க்குறாங்க…. திருச்சி மேடையில் திமுகவை கதறவிட்ட விஜய்…!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…

12 minutes ago

பகீர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையையே கொன்ற தாய்.. நடுங்க வைக்கும் பின்னணி…!

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக்…

18 minutes ago