தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச் சென்றதே முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வேட்பாளர் யாரென்றே தெரியாத தொகுதிகளிலும் விஜய்யின் முகத்திற்காக இளைஞர்கள் வாக்களித்திருப்பது, அரசியல் களத்தில் அவர்களின் தாக்கத்தை உணர்த்தியுள்ளது. இதனால், இழந்த இளைஞர் வாக்கு வங்கியை மீட்கும் நோக்கில் திமுக தலைமை உடனடியாகக் களமிறங்கி, அதன் ஒரு பகுதியாக ‘ஜென் இசட் திமுக’ (Gen Z DMK) என்ற விழிப்புணர்வு கூட்டத்தை அண்மையில் நடத்தியது.
இருப்பினும், இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சில இளைஞர்களின் உரைகள் இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. எதிர்க்கட்சியினரும் திமுக விமர்சகர்களும் தங்களை வசைபாடப் பயன்படுத்தும் ‘கொத்தடிமைகள்’, ‘உபி’, ‘கொத்துஸ்’ போன்ற வார்த்தைகளை, அந்த இளைஞர்கள் மேடையிலேயே தங்களுக்குப் பெருமையான அடையாளமாகப் பேசி விவாதத்தைக் கிளப்பியுள்ளனர். கட்சியின் சாதனைகளையும் வரலாற்றையும் முன்வைத்துப் பேசுவதற்குப் பதிலாக, தங்களையே தாழ்த்திக்கொள்ளும் வகையில் பேசியிருப்பது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையேயும், நடுநிலையாளர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயல் இளைஞர்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை மேலும் சரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ள சூழலில், சமூக வலைதளங்களில் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதால், இனிவரும் கூட்டங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளைத் தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்களும் இடைத்தேர்தல்களும் வரவிருப்பதால், அதில் தங்களின் ஆளுமையை நிலைநாட்டவும், வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் இளைஞர்களைக் கவரும் வகையிலும் திமுக தலைமை தனது அடுத்தகட்ட செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…
வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…