“6 மாசம் சும்மா இருப்போம்னு சொன்னவங்க 6 நாள்ல கதறுறாங்க”… கல்யாண வீட்டுக்கு போய் ஏன் இப்படி புலம்புறாங்க?… திருச்சியில் மேடையைக் கிழித்த முதல்வர் விஜய்…!

Spread the love

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், வாக்காளர்களுக்கு நேரில் நன்றி செலுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திருச்சி தமிழகத்தின் இதயம்; இந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்” எனக் கூறி மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தான் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு ஆகியவற்றில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதையும் அவர் பொதுமக்களிடம் விளக்கினார்.

திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிய முதல்வர் விஜய், “தவெக ஆட்சி அமைந்ததும் ஆறு மாத காலம் சும்மா இருந்து வேடிக்கை பார்ப்போம் என்று சொன்னவர்கள், நாம் ஆட்சிக்கு வந்த ஆறே நாட்களில் கதற ஆரம்பித்துவிட்டார்கள்” என்று விமர்சித்தார். “நான் முதல்வராகப் பதவியேற்ற நாளில் இருந்து அரை மணி நேரம் கூட சும்மா இருக்க முடியாமல் அவர்கள் புலம்புகிறார்கள். அதிலும் குறிப்பாக, கல்யாண வீட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கூடச் சென்று தவெக ஆட்சியைப் பற்றிப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்” என எள்ளி நகையாடினார்.

தனது இந்த இமாலய வெற்றியைப் பற்றிப் பேசிய விஜய், “இந்தத் தேர்தலில், கடந்த 1977 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தை விட நாம் அதிக வாக்குகள் பெற்றிருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். அதற்காக நான் என்னை ஒருபோதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிடவில்லை; எம்.ஜி.ஆர் என்பவர் என்றும் எம்.ஜி.ஆர்தான். ஆனால், நாம் அனைவரும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் நின்று மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்போம்” என்று உறுதியளித்தார்.

இறுதியாக, தங்களை ஏமாற்றிய திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, தன்னை தமிழ்நாட்டின் ‘முதல் சேவகனாக’ மாற்றிய மக்களுக்கு அவர் நன்றி பாராட்டினார். தேர்தல் களத்தில் தவெக-விற்குத் துணையாக நின்று ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் தனது நன்றியைக் குறிப்பிட்ட அவர், “இன்னும் கொஞ்சம் கூடுதலாக நீங்கள் ஆதரவு தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” எனப் புன்னகையுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago