BREAKING: “நான் கோட் சூட் போட காரணமே இது தான்”… முதன்முறையாக முதல்வர் விஜய் உடைத்த பிளாக் & ஒயிட் ரகசியம்…!

Spread the love

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றது முதலே, தலைமைச் செயலகம் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் ‘கோட் சூட்’ அணிந்து பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அவர் பதவியேற்பு விழாவின் போதும் இதே உடையில் வந்திருந்ததை ஒரு சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு இன்று நேரில் நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் விஜய், இந்த ‘கோட் சூட்’ சர்ச்சைக்கும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் தனது பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள் கூட, ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியாமல் ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். மாறி மாறி தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த இரண்டு பெரிய கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, உங்கள் அண்ணனை முதல்வராக இல்லை, மக்களின் ‘முதல் சேவகனாக’ அரியணையில் அமர வைத்திருக்கிறீர்கள். இனி என் வேலை மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே ஆகும். எம்.ஜி.ஆருடன் என்னை நான் ஒப்பிடவில்லை, ஆனால் பேரறிஞர் அண்ணாவின் வழியில் நின்று மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன்” என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது உடை மீதான விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், “நான் ஏன் கோட், சூட் போடக்கூடாது? ஆதிக்கம் செலுத்துபவர்களும், அதிகாரம் படைத்தவர்கள் மட்டும்தான் கோட் சூட் அணிய வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் என்ன கலர் கலராகவா ஆடை அணிந்து வருகிறேன்? இரண்டே கலர்தான். நம் எல்லார் மனசையும் போல அது ‘பிளாக் அண்ட் ஒயிட்’. எல்லாவற்றிலும் இந்த விஜய் நேர்மையான பிளாக் அண்ட் ஒயிட்டாக இருப்பான் என்பதைக் குறிக்கவே இந்த உடை. இதில் இருக்கும் கருப்பு நிறம் யாரைக் குறிக்கும், எதைக் குறிக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” எனத் திராவிட அரசியல் குறியீட்டைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும், தன்னை நோக்கி வரும் கேலிகளும் கிண்டல்களும் தான் தனக்கான எனர்ஜி என்று குறிப்பிட்ட விஜய், “யார் எந்த நிலைக்குப் போனாலும் ஒரு சிலர் கிண்டலாகப் பேசத்தான் செய்வார்கள். நீங்கள் கிண்டல் அடிப்பதுதான் எனக்கு ஆற்றல், எனவே தொடர்ந்து விமர்சியுங்கள், நான் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே இருப்பேன். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டு ‘நச நச’ எனப் பேசும் டைப் நான் கிடையாது என்பதை என் முந்தைய கூட்டங்களிலேயே பார்த்திருப்பீர்கள். இப்போது மக்கள் அனைவரும் என்னிடம், ‘விஜய், நீங்கள் மக்களுக்கு நல்லது செய்யும் வேலையை மட்டும் பாருங்கள், விமர்சனம் செய்பவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று முழு நம்பிக்கையோடு கூறுகிறார்கள்” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

7 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

16 minutes ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

24 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

27 minutes ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

31 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

35 minutes ago