குற்றவாளிகள் போலீசாரிடம் இருந்து தப்பிக்கப் பல விசித்திரமான வழிகளைக் கையாள்வதைப் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் போதை ஆசாமி ஒருவர் போலீசுக்கு பயந்து ஓடி, அதைவிடப் பெரிய ஆபத்தான முதலை வாயில் சிக்கிய வினோதச் சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. லூசியானாவின் ‘இன்டர்ஸ்டேட் 10’ நெடுஞ்சாலையில் டொயோட்டா கார் ஒன்று தாறுமாறாகச் செல்வதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தடுப்புச் சுவரில் மோதி, டயர் வெடித்த நிலையில் நின்ற அந்த காரை சோதனையிட்ட போது, அதை ஓட்டி வந்தவர் 40 வயதான விக்டர் ரிவாஸ் என்பது தெரியவந்தது.
அதிமுக வேகத்தில் வந்த போலீசார் விக்டரை பிடிக்க முயன்றபோது, அவர் காரை விட்டு இறங்கி நெடுஞ்சாலையின் கீழே இருந்த ஒரு ஆழமான சதுப்பு நிலத்திற்குள் குதித்துத் தப்பியோடினார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சாலையோரம் நடப்பதைக் கண்டனர். ஆனால், விக்டர் மீண்டும் அதே சதுப்பு நிலத் தண்ணீருக்குள் ஓடி மறைந்தார். அப்போதுதான் அந்த நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. போலீசார் வைத்திருந்த உடல் கேமராவில் பதிவான காட்சிகளின்படி, தண்ணீருக்குள் மறைந்திருந்த ஒரு ராட்சத முதலை மின்னல் வேகத்தில் வந்து விக்டரை கொடூரமாகத் தாக்கியது.
இந்த பயங்கர முதலைத் தாக்குதலில் விக்டரின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கைகளில் இருந்து ரத்தம் கொட்டிய போதிலும், அவர் விடாமல் தப்பியோட முயன்றார். இறுதியில், நவீன ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீசார் காட்டின் அடர்ந்த பகுதியில் மறைந்திருந்த விக்டரைக் கண்டுபிடித்துச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். படுகாயமடைந்த அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் மீது குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியது, போலீசாரின் உத்தரவை மீறி தப்பியோடியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான சம்பவத்தை லூசியானா போலீசார் மிகவும் நகைச்சுவையாகக் கையாண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் ஒரு ஏஐ (AI) புகைப்படத்தை வெளியிட்டு, அதில் ஒரு முதலை போலீஸ் சீருடை அணிந்து “ஆண்டின் சிறந்த காவல் அதிகாரி” விருதைப் பெறுவது போலச் சித்தரித்திருந்தனர். மேலும், “நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள், போலீசிடம் இருந்து தப்பிக்க முயலாதீர்கள், முக்கியமாக லூசியானா சதுப்பு நிலங்களில் ஒளியாதீர்கள். அங்கு எங்களுக்காகப் பணியாற்றும் வனவிலங்கு காவலர்கள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை!” என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் பயங்கர டிரெண்டாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…