மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணியாற்றிய அனுபவம், தனது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தில் மிக முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலின் அரிச்சுவடியைத் தனக்குக் கற்றுக் கொடுத்த ஆசானாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் இருந்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தலைமையின் பேராதரவுடனும் நம்பிக்கையுடனும் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றதையும், அந்தத் தேர்தலில் சுமார் 60,000 வாக்குகள் பெற்று மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தது தனக்கு மிகுந்த பெருமையளிப்பதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, தனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளைக் கருத்தில் கொண்டே கட்சியிலிருந்து விலகும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முடிவு எவ்வித அவசரத்திலோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ எடுக்கப்படவில்லை என்று கூறிய மூகாம்பிகா ரத்தினம், தனது அரசியல் பயணத்தில் இதுவரை உறுதுணையாக இருந்த தலைவர், துணைத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் தனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…